நாடு திரும்பிய இந்திய அணிக்கு அவர்களின் பாணியிலேயே ஷாக் கொடுத்த இங்கிலாந்து அணி ! முழு விபரம் உள்ளே

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற இருதரப்பு தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்லலாம். அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து அவர்களை தோற்கடித்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வெற்றிகொண்டது. இந்திய அணி இதில் பெற்ற டெஸ்ட் வெற்றியானது ஒரு வரலாற்று ரீதியான வெற்றியாக அமைந்து இருந்தது. அதிலும் முக்கிய வீரர்கள் விளையாடாத நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியமை மிக மிகப் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறித்த தொடரில் இந்திய அணியின் தலைவராக டெஸ்ட் தொடருக்கு இறுதியாக நடைபெற்ற 3 போட்டிகளில் அஜிங்கியா ரஹானே செயற்பட்டிருந்தார். அவர் சிறப்பான முறையிலே செய்யப்பட்டதன் மூலம் இந்திய அணிக்கு இவ்வாறான ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்று கிடைத்தது. இந்நிலையில் டெஸ்ட் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்றைய தினம் நாடு திரும்பியது.

அதனை தொடர்ந்து அணி வீரர்களுக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இந்தியா அணி தங்களுடைய அடுத்த சர்வதேச கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுகிறது. இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியுடன் விளையாடுகிறது.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையில் முதல் தொடராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இவ்வாறான நிலையில் இந்திய அணியானது கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் அணியை அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் இங்கிலாந்து அணியின் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக முதலிரண்டு போட்டிருக்குமான அணியை நேற்று அறிவித்து இருக்கிறது. அதன் படி இங்கிலாந்து அணியின் தலைவராக தொடர்ந்து செயற்பட்டுவரும் ஜோ ரூட் பெயரிடப்பட்டுள்ளார். 16 வீரர்கள் போட்டிக்காக பெயரிடப்பட்டுள்ளதுடன் 6 வீரர்கள், மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

1. ஜோ ரூட் (அணித்தலைவர்), 2. ஜொப்ரா ஆர்சர், 3. மொயின் அலி, 4. ஜேம்ஸ் அண்டர்சன், 5. டொம் பெஸ், 6. ஸ்டூவர்ட் ப்ரோட், 7. ரோரி பேர்ன்ஸ், 8. ஜொஸ் பட்லர், 9. ஷக் கிராவ்லி, 10. பென் போக்ஸ், 11. டான் லௌரன்ஸ், 12. ஜேக் லீச், 13. டொம் சிப்லி, 14. பென் ஸ்டோக்ஸ், 15. ஒல்லி ஸ்டோன், 16. கிறிஸ் வோக்ஸ்.

மேலதிக வீரர்கள்
1. ஜேம்ஸ் பிரேசி, 2. மேசன் கிரேன், 3. சகிப் மெஹ்மூத், 4. மேத்யூ பார்கின்சன், 5. ஒல்லி ரொபின்சன், 6. அமர் விர்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *