இது தேவல்ல ! எங்களுடைய அடுத்த இலக்கு இந்திய அணி தான் – இலங்கை அணியை கணக்கெடுக்காமல் விட்ட கிறேம் ஸ்வான்

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐசிசி உலக சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றது. அதில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களினால் இலகு வெற்றி பெற்றிருந்தது. இவ்வாறான நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியானது தற்போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறானதொரு நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தங்களுடைய அடுத்த இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டு 3 வகையான தொடர்களிலும் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் போன்ற மிகப் பாரிய தொடர் ஒன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது பெப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதற்காக முதலில் நடைபெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றன நிலையில் இந்திய அணியின் குழாமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் இடம் பெறாத பல வீரர்களுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உபாதைக்கு உள்ளான இஷாந்த் சர்மா, கே.எல் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கும் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறேம் ஸ்வான் இந்திய அணியை வெல்வது எங்களது அடுத்த இலக்கு என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து ஸ்வான் தெரிவிக்கையில், ‘ஆஷஸ் தொடரை எதிர்பார்த்து இருந்ததில் இருந்து நாங்கள் மாற வேண்டும். அவுஸ்திரேலிய அணியை அவுஸ்திரேலிய மண்ணில் வென்ற இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவது தான் மிகப்பெரிய விடயமாக கருதப்படும் என்று நான் நினைக்கிறேன்.

இங்கிலாந்து அணி 2012ஆம் ஆண்டு இந்திய மண்ணில் தொடரை வென்ற பின் மிகப்பெரிய அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியில் திறமையான சுழற்பந்து வீச்சாளர்களும் கெவின் பீட்டர்சன் போன்ற துடுப்பாட்ட வீரர்களும் தேவை’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *