இவை எல்லாம் ராகுல் டிராவிட்டின் செயலாகும் – இரு நாடுகளின் குழறுபடிகளை மறந்து டிராவிட்டை புகழ்ந்து தள்ளிய இன்ஸமாம்

விளையாட்டு

ஆரம்பத்தில் விராட் கோஹ்லி தலைமையில் அவுஸ்ரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது இறுதியில் அஜிங்கிய ரஹானே தலைமையில் தொடரை முடித்துக் கொண்டது. இந்திய அணி அவுஸ்ரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான போட்டிகளிலும் விளையாடிய நிலையில் ஒருநாள் தொடரை மாத்திரம் அவுஸ்திரேலிய அணி கைப்பற்ற அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருபதுக்கு இருபது மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தொடர்களை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று ரீதியில் சாதனை படைத்தது.

இவ்வாறான நிலையில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியமை முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டின் செயலாகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ராகுல் டிராவிட் முன்னதாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் இந்திய ஏ அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆகவும் செய்யப்பட்டிருக்கின்றார்.

தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் ராகுல் டிராவிட் தலைமையில் ஏராளமான இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்திய அணி அவுஸ்ரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது என்றால் அதில் இளம் வீரர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மிக முக்கியமான போட்டியில் இந்திய அணியின் உடைய முக்கிய அனுபவ வீரர்கள் விளையாடவில்லை.

பல வீரர்களுக்கு உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் விளையாடவில்லை. அந்த வகையில் விராட் கோலி முதல் போட்டியுடன் தனக்கு முதல் குழந்தையை கிடைக்க உள்ளதன் அடிப்படையில் அவர் நாடு திரும்பியிருந்தார். அதன் காரணமாகவே இந்திய அணியின் தலைவராக உப தலைவரான அஜிங்கிய ரஹானே செயற்பட்டிருந்தார். அனுபவ வீரர்களான விராட் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றது.

இதில் இளம் வீரர்களான மொஹமட் சிராஜ், வொஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன், ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், சுப்மன் கில் ஆகிய இளம் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி இருந்தார்கள். இவ்வாறானதொரு நிலையில் இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் இவ்வாறான வெற்றியை பெற்றதற்கு முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் அணி தலைவருமான ராகுல் டிராவிட் தான் காரணமென இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”அவுஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது எல்லோருக்கும் கடினமானது. பல இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அவுஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றியதுபோல், எந்த அணியையும் எனது வாழ்க்கையில் நான் பார்த்தது இல்லை. ராகுல் டிராவிட்டை தவிர வேறு எவராலும் இளம் வீரர்கள் தங்கள் தளத்தை மேம்படுத்தவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

ராகுல் டிராவிட்டின் வலிமை. அவரை ஏன் தடுப்புச்சுவர் என்று அழைக்கிறர்கள் என்றால், அவர் வலிமையான பாதுகாப்பு ஆட்டக்காரர். அவரால் எந்தவித கண்டிசனிலும் விளையாடுவார். மனதளவில் வலிமை கொண்டவர். எந்தவொரு இடத்திற்கும் ஏற்ப அவரி சரி செய்து கொள்வார். இந்த வீரர்களுடன் ராகுல் டிராவிட் பணிபுரிந்தது, அவர்களை மனதளவில் வலிமைப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பத்தை விட, எந்தவொரு கண்டிசனிலும் விளையாடும் வகையில் தடுப்பு மிகவும் சிறந்தது என்ற வகையில் அவர்களை தயார் செய்ய முயற்சி செய்துள்ளார். ராகுல் டிராவிட் அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததன் மூலம், அவர்கள் அதில் இருந்து பயனடைந்துள்ளனர்” என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *