கோஹ்லி – ரஹானே இடையிலான வித்தியாசம் இதுதான்.. பரத் அருண் ஓபன் டாக் ! வெளியில் தெரியாத சில விசயங்களை வெளிச்சத்திற்கு வருகிறது

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருந்தது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா அணியுடன் விளையாடியது. இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியுடன் விராட் கோஹ்லி நாடு திரும்பியிருந்தார். அவருக்கு முதல் குழந்தை கிடைக்க இருந்ததன் அடிப்படையில் விராட் கோஹ்லி நாடு திரும்பினார்.

அதன் பின்னர் நடைபெற்று இறுதி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக, வழமையாக உப தலைவராக செயல்பட்டு வரும் அஜிங்கிய ரஹானே தலைவராக செயற்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணி படு மோ சமான தோல்வியை சந்தித்தது. தோல்வி என்பதற்கு அப்பால் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் 36 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது.

இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மீதும் அதிகளவிலான விமர் சனங்கள் முன்வைக்கப்பட்டன. அது ஒரு பக்கம் இருக்க விராட் கோஹ்லி நாடு திரும்பியதை தொடர்ந்து இந்திய அணியின் தலைவராக அஜிங்கிய ரஹானே செயல்பட ஆரம்பித்தார். ரகானே அணித் தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்திய அணி படு மோ சமான தோல்வியை சந்திக்க போகிறது போகிறது என எல்லோரும் சொல்லிக் கொண்டு வந்த நிலையில் அஜிங்கிய ரஹானே இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. 4வது போட்டி தான் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கின்ற போட்டியாக அமைந்திருந்த நிலையில் ரஹானே சிறப்பான முறையிலே அணியை வழிநடத்தி இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அது மாத்திரமல்லாமல் அவுஸ்திரேலிய அணியிடைய கோ ட்டை என வர்ணிக்கப்படுகின்ற பிரிஸ்பன் மைதானத்தில் 32 வருடங்களின் பின்னர் இந்திய அணி முதல் முறையாக அஜிங்கிய ரஹானே தலைமையில் டெஸ்ட் பற்றிய பதிவு செய்தது.

இவ்வாறான நிலையில் அஜிங்கிய ரஹானே இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்க வேண்டும் என எல்லோரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மாத்திரமல்லாமல் ரசிகர்கள் எல்லோரும் ரஹானே – கோஹ்லி அணித்தலைமை திறமையை ஒப்பிட்டு பேசுவதற்கு ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான பாரத் அருண் இந்திய அணியின் தலைவர்களான விராட் கோஹ்லி மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோருக்கிடையிலான அணித்தலைமை வித்தியாசம் தொடர்பில் பேசியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், ரஹானே மிகவும் அமைதியானவர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எப்போதும் அமைதியாகவே இருப்பது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் ரஹானே பதற்றமாகவே இருப்பார். இருந்தாலும் அந்த பதட்டத்தை வெளியில் அவர் காட்டிக் கொள்ளமாட்டார். ஒவ்வொரு வீரரையும் ஆதரித்து பேசுவார். மிக முக்கியமாகப் பந்துவீச்சாளர்கள் தவறு செய்யும்போது அதனை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவளித்து செல்வார்.

ஆனால் விராட் கோஹ்லி அப்படி கிடையாது. ஒரு பந்துவீச்சாளர் 2 தவறான பந்துகளை வீசி விட்டால் அவருக்கு கோ பம் வந்து விடும். அது அவருடைய ஆக் ரோஷம். ஆனால் விராட் கோஹ்லியின் ஆக் ரோஷத்தை கோ பம் என தவறாக புரிந்து கொள்கிறார்கள். ரஹானே கோ பப்பட மாட்டார். என்றாலும் முடிவுகளை சரியான வழியில் செலுத்த திட்டமிட்டு அதன்படி செய்வார். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *