இந்திய டெஸ்ட் தோல்வியால் அவுஸ்திரேலிய அணிக்குள் ச ண்டை.. பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கரை விளா சும் அணி வீரர்கள் !!

விளையாட்டு

இந்திய அணியானது அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டி20 சர்வதேச தொடர் மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றி வரலாற்று ரீதியில் சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய அணி ஒரு நாள் சர்வதேச தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை பொருத்தவரையில் இந்திய அணி இறுதியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி அதாவது அவுஸ்திரேலிய அணியின் உடைய கோ ட்டை என வர்ணிக்கப்படுகின்ற பிரிஸ்பேன் மைதானத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியானது இந்தியாவின் வரலாற்றையும் மாற்றிப் போட்டது.

இறுதிநேரத்தில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த்தின் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் 32 வருடங்களின் பின்னர் பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்தப் போட்டியில் இறுதியாக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையிலேயே இந்திய அணி டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இவ்வாறான நிலையில் இந்திய அணி தொடரை வெற்றி கொண்டு தற்போது இங்கிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் விளையாடுவதற்காக நாடு திரும்பியிருக்கும் இந்த நிலையில், இந்திய அணியுடனான தோல்வியால் அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் அனுபவ வீரர்கள் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கரின் நடவடிக்கைகள் அனுபவ வீரர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியின் போது பயிற்றுவிப்பாளரான ஜஸ்டின் லாங்கர் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டமை அனுபவ வீரர்களுக்கு பிடிக்கவில்லையாம். இந்த நடவடிக்கையானது அவர்களிடத்தில் மிகவும் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜஸ்டின் லாங்கரின் இவ்வாறான செயல்பட்டால்தான் தொடரை இழந்ததாக அனுபவ வீரர்கள் குறிப்பிட்டு வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்வியை தொடர்ந்து அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக செயல்பட்டு வரும் டிம் பெய்ன் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு தலைமையை ஒப்படைக்க வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *