10 மாதங்களின் பின்னர் கிரிக்கெட் இரசிகர்களுக்கு அ தி ர் ச் சி செ ய் தி.. அதுவும் இந்த தொடரிலா !

விளையாட்டு

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் குறித்த போட்டியை பார்வையிட 27 ஆயிரம் இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் நிறைவடைந்த கையோடு இந்திய அணியானது மூவகையான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா செல்கிறது.

முதல் தொடராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரும், இரண்டாவது தொடராக மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரும், இறுதியாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டியை மைதானத்தில் நேரடியாக பார்வையிட 50 சதவீதம், அதாவது 27 ஆயிரம் இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் தலா 27 ஆயிரம் இரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *