டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்வதற்கான வாய்ப்புக்கள் இவை தான்.. இந்திய அணிக்கே அதிஷ்டம் இருக்கிறது !! முழு விபரம் உள்ளே

விளையாட்டு

கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தான். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடக் கூடிய அளவுக்கு கிரிக்கெட் சுருங்கிப் போயிருக்கிறது. இவ்வாறு புதுவிதமான கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமாகி கொண்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அழி வடைந்து செல்லும் நிலைக்கு உள்ளானது. தற்கால உலகில் அனைவரும் மிகவும் பிஸியாக இருக்கின்ற நிலையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக அளவில் நேரம் கொடுத்து பார்ப்பதும் குறைவாக இருக்கிறது.

இதனால் 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் தொடர்ந்து விளையாடுகின்ற டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டே வருகிறது. இதனை உணர்ந்தே சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் போட்டிகளில் உயிரூட்டும் வகையில் புதிதாக ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்ற ஒரு தொடரை அறிமுகம் செய்தது.

இரண்டு வருடங்களுக்கு நடைபெறுகின்ற இந்த தொடரில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் குறித்த தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வருகின்ற ஜூன் மாதம் இங்கிலாந்தில் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

குறித்த இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தெரிவாகி இருக்கிறது. அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது கொரோ னா வைர ஸ் தாக் கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இவ்வாறு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இவ்வாறானதொரு நிலையில் நியூசிலாந்து அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் அணி எது என்பதைத் தீர்மானிப்பதில் தான் தற்போது மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. அந்த அணி இந்தியாவா அல்லது இங்கிலாந்தா என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சென்னையில் ஆரம்பமாகிறது. தற்போது உள்ள ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலின்படி இந்திய அணி 71.7 சதவீத புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி 70 சதவீதமான புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தாலும் கூட நியூசிலாந்து அணிக்கு இனி போட்டிகள் இல்லை என்பதன் அடிப்படையில் அவ்வணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இவ்வாறான நிலையில் முதல் இடத்தில் இருக்கின்ற இந்திய அணியும் 4வது இடத்தில் இருக்கின்ற இங்கிலாந்து அணியின் தான் தற்போது பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றும் போது இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றினால் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

தற்போது நடைபெறுகின்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவதாக இருந்தால் குறைந்தது இரண்டு போட்டிகள் கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டும். மாறாக இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டுமாயின் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

எனினும் இந்திய அணிக்கே அதிகமான வாய்ப்பு காணப்படுகிறது. அவுஸ்திரேலிய அணிக்கு இறுதிப் போட்டியில் ஆட வாய்ப்பு மிக மிக அரிதாகவே காணப்படுகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டி ஆகவேண்டும். கீழே காணப்படுகின்றவாறு அமைந்தால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *