இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் எடுத்த அதி ரடி முடிவு

விளையாட்டு

இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிக்கொண்டு வரும் நிலையில் பயிற்றுவிப்பாளரான மிக்க ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த தயாராகியுள்ளார். முழு உலகிலும் ஏற்பட்ட கொ ரோனா வைர ஸ் தாக் கத்தின் பின்னர் கடந்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கை அணி முதல் முறையாக கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரை முழுமையாக இழந்து படுதோல்வியடைந்தது.  அதனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

அந்த தொடரையும் முழுமையாக இழந்தது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இலங்கை அணியை 2-0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்தது.  இவ்வாறு இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்த்தர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்,

‘இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இந்தத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் மிக மோ சமாக இருந்தது. இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஆக்ரோசமான முன்னேற்றத்தை காண வேண்டும். அது தொடர்பாக அணியின் வீரர்களுடன் தாம் கலந்துரையாடி வருகிறோம்.’ என மிக்கி ஆத்தர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *