ஐ.பி.எல் ஏலத்தில் மாஸாக களமிறங்கவுள்ள சச்சின் மகன் அர்ஜூன்.. ஆரம்ப ஏல தொகை எவ்வளவு தெரியுமா ?

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான டி20 லீக் தொடர்களில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் காணப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரானது எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இவ்வாறான நிலையில் குறித்த தொடருக்காக வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலமானது எதிர்வருகின்ற 18ஆம் திகதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு வீரர்களை இலக்கு வைத்திருக்கிறது. தங்கள் அணியில் இந்த வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக பலவிதமான ஆயத்தங்களை சில அணிகள் மேற்கொண்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் கிரிக்கெட் உலகில் லிட்டில் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் தான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகில் பலவிதமான சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இவர் தன்னுடைய மகனையும் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீரராக உருவாக்கியிருக்கிறார். சச்சினின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை தொகையான 20 லட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் எடுப்பதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் வலைப்பந்து வீச்சாளராக சில வருடங்கள் செயற்பட்ட அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த வருடம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பந்து வீச்சாளராக விளையாடி இருந்தார்.

இவ்வாறான நிலையில் அண்மையில் நிறைவுக்கு வந்த சையித் முஷ்டாக் அலி கிண்ண தொடரில் நீண்ட நாட்களின் பின்னர் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கினார். ஆனால் அவரால் அந்த தொடரில் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் தொடருக்கான ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரும் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே ஏலத்தின் அடிப்படை தொகையான இருபது லட்சம் ரூபாவில் அவரை ஏலத்தில் எடுப்பதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *