லங்கா பிரிமியர் லீக் தொடரானது எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பெற்ற பாகிஸ்தான் வீரரான ஆசிப் அலி மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மாலன் ஆகியோர் தேசிய அணியின் தொடர்களில் விளையாடுவதன் அடிப்படையில் லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகினர். கடந்த மாதம் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரின் ஏலத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
சொஹைப் மலிக், உஸ்மான் ஷின்வாரி மற்றும் ஆசிப் அலி ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் வீரரான ஆசிப் அலி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மேலும் இங்கிலாந்து வீரரான டேவிட் மாலன் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விளையாடவுள்ளதன் அடிப்படையில் லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக இரண்டு வீரர்களுடன் சேர்ந்து மொத்தமாக 4 புதிய வெளிநாட்டு வீரர்கள் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்களான ரவி பொப்பாரா மற்றும் டொம் மொரிஸ், தென்னாபிரிக்க அணி வீரர்களான கெயல் அபோட் மற்றும் டுவைன் ஒலிவெர் ஆகிய 4 வீரர்கள் புதிதாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றத்தை தொடர்ந்து ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவசிசு வரிசை மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஸ்டாலியன்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றும் என இரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.