விராட் கோஹ்லியை வைத்து சம்பவம் செய்த இங்கிலாந்து வீரர் மொயின் அலி.. கிரிக்கெட் உலகில் கோஹ்லியை வைத்து யாருமே செய்யாத சாதனை !!

விளையாட்டு

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையில் 4 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியின் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவதாக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 300 யிற்கும் அதிகமான ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அவ்வணியினுடைய தலைவர் விராட் கோஹ்லி ஓட்டம் எதுவும் பெறாமல் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலியின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விராட் கோஹ்லி இவ்வாறு ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அவர் மீது இரசிகர்கள் பல விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இவ்வாறானதொரு நிலையில் குறித்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விராட் கோஹ்லியை ஓட்டம் எதுவும் பெறாமல் மொயின் அலி தன்னுடைய சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழப்பு செய்தார். அதன் மூலம் மொயின் அலி புதியதொரு பெருமையைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக திகழ்ந்துவரும் ‘ரன் மெஷின்’ என்று அழைக்கப்படும் விராட் கோஹ்லி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11 தடவைகள் ஓட்டம் எதுவும் பெறாமல் ‘டக்அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

இதில் பத்து தடவைகள் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு ஓட்டம் இன்றி ஆட்டமிழந்திருந்த நிலையில், தற்போது முதல் முறையாக ஒரு சுழற்பந்துவீச்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவரை முதல் முறையாக சுழற்பந்துவீச்சில் ஓட்டமின்றி டக்அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த பெருமையை மொயின் அலி பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *