அப்பவே சொன்னாங்க, யாரும் நம்பல்ல.. இங்கிலாந்து ஒருநாள், டி20 தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரருக்கு ஓய்வு !!! இவரின் வருகை இதற்கு காரணமா ?

விளையாட்டு

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரும், இறுதியாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரும் நடைபெறவுள்ளன.

இதில் முதல் தொடரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலிரண்டு போட்டிகளும் நிறைவு பெற்றிருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தி இருக்கிறது.

இந்த தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்பதைவிட இந்த தொடரின் மூலம் நடைபெற உள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்த அணி தெரிவாகும் என்பதுதான் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளும் நிறைவடைந்ததன் பின்னர் இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேச தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் போன்ற வெள்ளை பந்து, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்கள் நடைபெறவுள்ளன.

இந்த தொடரில் விளையாடுவதற்காக தமிழக வீரரான நடராஜன் இந்திய அணிகள் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். 20ஆம் திகதி ஆரம்பமாகின்ற விஜப் ஹஸாரே தொடருக்கான தமிழ்நாடு அணியில் இடம் பெற்றிருந்த நிலையிலேயே இங்கிலாந்து அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நடராஜன் இவ்வாறு இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நடராஜன் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான யோக்கர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படுகின்ற ஜஸ்பிரிட் பும்ராவுக்கு இங்கிலாந்து அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *