2021 ஐ.பி.எல் தொடரில் ஏலம் போன தமிழன் சித்தார்த்.. சென்னையில் இருந்து டெல்லிக்கு போகும் வீடியோவை வெளியிட்ட டெல்லி அணி – இது வேற லெவல் வீடியோ

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெற்று வருகின்ற பிரபலமான லீக் தொடர்களில் ஒரு தொடராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் அமைந்திருக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் குறித்த தொடரின் 14ஆவது பருவ காலத்திற்கான தொடரானது இந்த வருடம் மே மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அதற்கு வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் நேற்று சென்னையில் இடம்பெற்றது. இதன்போது பல வீரர்கள் பல பெறுமதியான விலைகளில் கொள்வனவு செய்யப்பட்டனர்.

எதிர்பார்த்த வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படாத நிலையில் எதிர்பாராத வீரர்கள் ஏலத்தில் அதிக விலையில் கொள்வனவு செய்யப்பட்டார்கள். இந்த ஏலத்தில் 292 வீரர்கள் உடைய பெயர்கள் வாசிக்கப்பட்டது. 164 வீரர்கள் இந்திய வீரர்களாகவும், 125 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும், 3 வீரர்கள் டெஸ்ட் அந்தஸ்து அல்லாத நாட்டைச் சேர்ந்த வீரர்களாகவும் இடம்பெற்றிருந்தனர்.

இதில் 22 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 61 வீரர்கள் ஏலத்தின் போது கொள்வனவு செய்யப்பட்டார்கள். இதில் நடைபெற்று முடிந்த அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட சையித் முஸ்டாக் அலி கிண்ண தொடரில் தமிழ்நாடு அணிக்காக இறுதிப் போட்டியில் கெத்தாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகத் திகழ்ந்ததுடன் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்ற தமிழக வீரர் சுழற்பந்து வீச்சாளரான மணிமாறன் சித்தார்த் வென்றார்.

அவரை அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய் விலையில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி கொள்வனவு செய்தது. கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த மணிமாறன் சித்தார்த் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வில்லை. இவ்வாறான நிலையில் நடைபெற்று முடிந்த சையித் முஸ்டாக் அலி கிண்ண தொடரில் ஹீரோவான மணிமாறன் சித்தர்த்துக்கு எப்படியும் 2021 ஐ.பி.எல் தொடரில் விளையாட கூடிய வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு தெரிவான மணிமாறன் சித்தார்த்தை தங்கள் அணிக்கு வரவேற்கும் முகமாக டெல்லி அணி கெப்பிடல்ஸ் அணி ஒரு வீடியோ காணொளி ஒன்றினை வெளியிட்டது. அந்த காணொளி வேற லெவல் என்ற அளவுக்கு அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *