இவர கேப்டன்-னு சொல்லவே வெக்கமா இருக்கு.. அப்படியா நடந்துக்குறாரு – கோஹ்லியின் செயற்பாட்டால் கவலையடைந்த பிரபல வீரர் ஓபன் டாக்

விளையாட்டு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, கள நடுவர்களில் ஒருவரான நிதின் மேனனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம், வேறு ஒரு விளையாட்டாக இருந்திருந்தால் அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பார். ஆனால் போட்டியின் மத்தியஸ்தராக செயற்பட்ட ஜவகல் ஸ்ரீநாத் சிரித்துக் கொண்டிருக்கிறார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் லோயிட் கடுமையாக விம ர்சனம் செய்துள்ளார்.

குறித்த டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டிற்கு எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பு கோரப்பட்டது. அதற்கு கள நடுவரான நிதின் மேனன் ஆட்டமிழப்பு இல்லை என தீர்ப்பு வழங்க விராட் கோஹ்லி மூன்றாம் நடுவரிடம் மே ன்முறையீடு செய்தார். அந்த முடிவானது, களநடுவரின் தீர்ப்பு என வெளியான நிலையில் இறுதியில் ஆட்டமிழப்பு இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் ஆத் திரமடைந்த கோஹ்லி கள நடுவரான நிதின் மேனனிடம் சென்று வா ர்த்தைப் போ ரில் ஈடுபட்டார். இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள டேவிட் லோயிட், ‘ஒரு அணியின் தலைவர் கள நடுவரை விம ர்சனம் செய்கிறார், தரம் தாழ் த்துகிறார், அச்சு றுத்துகிறார்.

ஆனால் அவர் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுகிறார். இது எப்படி நடக்க முடியும்? வேறு விளையாட்டாக இருந்தால் அவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். நியாயமாகப் பார்த்தால் அடுத்த போட்டியில் கோஹ்லியை விளையாட அனுமதிக்க முடியாது. கிரிக்கெட்டிலும் மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டையைக் காட்டி வெளியேற்ற வேண்டும்.

கோஹ்லியின் செயலுக்கு நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு போட்டியின் மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத் ஒரு வார்த்தை கூட இதைக் கண்டிக்கவில்லை.’ என கடுமையாக விளா சியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *