டெஸ்ட் தரவரிசையில் ஐ.சி.சி யினால் நம்ம அஸ்வினுக்கு கிடைத்த பரிசு.. தமிழன் என்று சொல்ல தலை நிமிர்ந்து நில்லடா !!!

விளையாட்டு

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேலும் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் மையப்படுத்தி குறித்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்க தவறிய பட்சத்தில் அவர் நான்காமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட் 2 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை பள்ளிகளுடன் (715) 11ஆவது நிலைக்கு உயர்வடைந்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களை விளாசிய ரோஹிட் சர்மா 9 நிலைகள் முன்னேறி 14ஆவது நிலைக்கு உயர்வடைந்துள்ளார். மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பிரகாசித்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் 5 நிலைகள் முன்னேறி 32ஆவது நிலைக்கு உயர்வடைந்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய சகலதுறை வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 14 நிலைகள் முன்னேறி 81ஆவது நிலைக்கு உயர்வடைந்துள்ளார்.  டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட் இரண்டாவது டெஸ்டில் பிரகாசிக்க தவறிய பட்சத்தில் அவர் நான்கு நிலைகள் பின்தள்ளப்பட்டு இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் சிறப்பான முறையில் பந்துவீசிய பங்களாதேஷ் சுழற்பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் 5 நிலைகள் முன்னேறி 22ஆவது இடத்தை அடைந்துள்ளார். மேலும் பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கதாநாயகனாக விளங்கி போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்ற சுழற்பந்துவீச்சாளர் ரஹ்கீம் கோர்ன்வால் 16 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (373) 49ஆவது நிலைக்கு உயர்வடைந்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து அணியுடனான போட்டியில் பந்துவீச்சு மாத்திரமல்லாது, துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த சகலதுறை வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதல் ஐந்து நிலைகளுக்குள் இடம் பிடித்துள்ளார். அவர் 336 தரவரிசை புள்ளிகளைப் பெற்று தற்போது 5ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *