மூன்றாவது டெஸ்டில் இரு மாற்றங்களை மேற்கொள்ளும் இந்திய அணி.. மீண்டும் அணிக்கு திரும்பும் நம்ம யா ர்க்கர் கி ங் – விளையாடும் பதினொருவர் அணி இதோ !

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்திருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றிருக்கிறது.

இன்னும் இரண்டு போட்டிகளில் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியானது கிரிக்கெட் உலகிலேயே மிகப் பெரிய மைதானமாக அமைக்கப்பட்டிருக்கின்றன அகமதாபாதில் நடைபெற இருக்கிறது.

அதுவும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது. குறித்த மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வருகின்ற 24ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணி தொடர்பில் நாம் அவதானம் செலுத்தலாம். சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என்கின்ற காரணத்தினால் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடியது.

இவ்வாறான நிலையில் அடுத்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக அகமதாபாதில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியினுடைய மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. அதனடிப்படையில் கடந்த போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்படவுள்ளார்.

அவருக்கு பதிலாக இடண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ரா மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குள் வருகிறார். அடுத்த போட்டியில் விளையாடக் கூடிய இந்திய உத்தேச பதினொருவர் அணி கீழே தரப்பட்டிருக்கிறது.

Shubman Gill, Rohit Sharma, Cheteshwar Pujara, Virat Kohli (captain), Ajinkya Rahane (vice-captain), Rishabh Pant (wicket-keeper), Hardik Pandya, Ravichandran Ashwin, Axar Patel, Jasprit Bumrah and Mohammed Siraj.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *