‘இந்த விஷயத்துல CSK செம கெத்து, வேற லெவல்..’ சென்னை அணியை முதல் முறையாக புகழ்ந்து தள்ளிய கம்பீர் !!

விளையாட்டு

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது அதிக சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய அணியாக காணப்படுகிறது. 2021 ஐபிஎல் தொடருக்கான வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் கடந்த வியாழக்கிழமை சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்வாறான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய மந்திரியுமான கவுதம் கம்பீர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை புகழ்ந்து பேசியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஏலத்தின் போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரே ஒரு வெளிநாட்டு வீரரையும், 2 இந்திய வீரர்களையும் ஏலத்தின் போது கொள்வனவு செய்தது. இதில் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான மொயின் அலியை 7 கோடி ரூபாய் விலையிலும், கடந்த வருடம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் விளையாடிய கேரளா வீரரான கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அதுமாத்திரமல்லாமல் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் புஜாராவை அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. இதன் பின்னர் 2014ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் புஜாரா களம் இறங்கியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில் ஒரு டெஸ்ட் வீரரை ஏன் டி20 தொடருக்காக சென்னை அணி கொள்வனவு செய்தது என்கின்ற வி மர்சனமும் பல பக்கங்களில் இருந்தும் எழுந்துள்ளன. சென்னை அணியின் வீரர்கள் தேர்வு பற்றி கவுதம் கம்பீர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் மெக்ஸ்வெல்லுக்கு தான் குறி வைத்தது. ஆனால், அவரை எடுக்க முடியவில்லை.

இதனால், சி.எஸ்.கே தோற்றதாக கூற முடியாது. ஏனெனில், மெக்ஸ்வெல்லை வாங்கக் கூடிய தொகையில், அவர்கள் மொயின் அலி மற்றும் கவுதம் என இரண்டு வீரர்களை வாங்கியுள்ளனர். சிஎஸ்கேவின் சிறந்த ஏலங்களில் இதுவும் ஒன்று. மூன்று முக்கிய வீரர்களை மட்டுமே சென்னை அணி எடுத்ததாக அனைவரும் கூறுகிறார்கள்.

ஆனால், அதுவே அந்த அணிக்கு போதுமானது. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் அதிக தொகைக்கு வீரர்களை வாங்கினார்கள். ஆனால், சென்னை அணி குறைந்த தொகையில் சிறந்த வீரர்களை வாங்கினார்கள். கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறந்த தேர்வு.

நிச்சயம் அவர்கள் சென்னை அணிக்காக இந்த முறை நிறைய போட்டிகளில் வெற்றியைத் தேடித் தருவார்கள் என கம்பீர் சென்னை அணியின் நிர்வாகத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *