இங்கிலாந்துடனான பகலிரவு டெஸ்டில் கும்ப்ளே, ஹர்பஜன், கபில் தேவ் ஆகியோரின் சாதனையை த கர்க்க காத்திருக்கும் நம்ம ரவிச்சந்திரன் அஸ்வின் !!

விளையாட்டு

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதன் முதல் இரண்டு போட்டிகள் நிறைவு பெற்றிருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தொடர் 1-1 அடிப்படையில் சமநிலையை பெற்று இருக்கிறது. இவ்வாறான நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாதில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இது போட்டியின் போது தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. 34 வயதாகும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் மாத்திரமல்லாமல் துடுப்பாட்டத்திலும் சதம் பெற்று போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

முன்னதாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து அஸ்வின் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவ்வாறான நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அஸ்வின் 400 விக்கெட்களை வீழ்த்துவதற்கு இன்னும் 6 விக்கெட்டுகள் மாத்திரமே தேவைப்படுகிறது. அந்தவகையில் இங்கிலாந்துடன் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் 400 விக்கெட்களை கைப்பற்றிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுக்கொள்வார்.

இது மாத்திரமல்லாமல் உலக அளவில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய 16வது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைப்பார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் அடிப்படையில் தற்போது அஸ்வின் 4-வது இடத்தில் காணப்படுகிறார். முதலிடத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி காணப்படுகிறார்.

இரண்டாவது இடத்தில் கபில்தேவ் 434 விக்கெட்டுகளையும், மூன்றாவது இடத்தில் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். குறித்த 400 விக்கெட்களையும் இந்திய வீரர்களான அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், கபில் தேவ் ஆகியோர் அதிக அளவிலான போட்டிகளில் வீழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனால் அஸ்வின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்களை கைப்பற்றும் பட்சத்தில் அவர் ஒரு புதிய சாதனையையும் படைப்பார். அது மாத்திரமல்லாது இந்த தொடரில் இன்னும் அதிகமான விக்கெட்களை கைப்பற்றுவதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் காணப்படும் ஹர்பஜன் சிங்கின் 417 விக்கெட்டுகளையும் அஷ்வின் முறியடிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *