இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளருக்கு வாழ்த்து தெரித்து வீடியோ வெளியிட்ட ஜாம்பவான்களான சச்சின், சங்கா, அம்லா !! காரணம் இதுதான்

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 37 வயதுடைய தம்மிக்க பிரசாத் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கையை கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமாக விளையாடி இருந்த தம்மிக்க பிரசாத் 25 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி இருக்கிறார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட தம்மிக்க பிரசாத் இறுதியாக 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.

அதே போன்று கடந்த 2006ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்றுக்கொண்ட தம்மிக்க பிரசாத் இறுதியாக 2015ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார். 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு இருபதுக்கு இருபது சர்வதேச போட்டியில் மாத்திரம் தம்மிக்க பிரசாத் விளையாடியிருந்தார்.

தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக அவருக்கு தொடர்ந்தும் இலங்கை அணியில் விளையாட கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தம்மிக்க பிரசாத் 25 போட்டிகளில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதுடன் இலங்கை அணியின் டெஸ்ட் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இவ்வாறான நிலையில் ஓய்வு பெற்ற தம்மிக்க பிரசாத்திற்கு கிரிக்கெட் உலகின் பல ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் குமார் சங்கக்கார அவரை வாழ்த்திய வீடியோ ஒன்றினை தம்மிக்க பிரசாத் அவருடைய டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதேபோன்று கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தம்மிக்க பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவர் வாழ்த்து தெரிவித்த வீடியோவினையும் தம்மிக்க பிரசாத் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். இவர்கள் மாத்திரமல்லாது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தம்மிக்க பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த வீடியோவை அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டிருந்தார். எனவே அவருடைய டுவிட்டர் பக்கத்தை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் முழு வீடியோவையும் பார்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *