2021 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா ? இந்திய ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தி !!

விளையாட்டு

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஆசிய நாடுகளுக்கிடையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய கிண்ண தொடர் நடாத்தப்பட்டு வருகிறது. இதில் 2020ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தொடரானது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடாத்தப்படவிருந்த நிலையில் முழு உலகிலும் ஏற்பட்ட கொ ரோனா வைர ஸ் தாக்கம் காரணமாக குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த 2020ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவுகின்ற அரசியல் ரீதியான முறுகல்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்க மாட்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் 2020 ஆசியக் கிண்ண தொடரை நடாத்தும் உரிமை கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்த உரிமையை தற்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதமளவில் ஆசிய கிண்ண தொடரானது இலங்கையில் நடாத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளதாக விளையாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தொடர் இலங்கையில் நடாத்தப்படுவதனால் இந்தியாவும் அதில் பங்கேற்கும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டின் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறவில்லை. ஆரம்பத்தில் அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டியாக நடைபெற்று வந்த ஆசிய கிண்ண தொடரானது கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட இருபதுக்கு இருபது தொடராக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1984ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்ற ஆசிய கிண்ண தொடரானது இறுதியாக 16ஆவது தொடராக கடந்த 2018ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது. இவ்வாறான நிலையிலேயே 17ஆவது தொடரானது இலங்கையில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

தொடரில் அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணியாக 7 தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்ற இந்திய அணி காணப்படுகிறது. அது மாத்திரமல்லாமல் நடப்பு சாம்பியனானகவும் இந்திய அணி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 5 தடவைகள் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி அடுத்த அணியாக காணப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *