இதுவரை காலம் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருமுறை கூட நோபால் வீசாத 4 பந்துவீச்சாளர்கள் யார் யார் தெரியுமா.?

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளர் நீண்டகாலம் விளையாடுகிறார் என்றால் சில தவ று செய்வது வழக்கம் தான். அதிலும் ஒருசில பந்துவீச்சாளர்கள் அடிக்கடி நோபால் வீசுவார்கள். அப்படி இருந்தும் இதுவரை சில குறிப்பிட்ட பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட் போட்டிகளில் நோபால் வீசாமலும் இருந்துள்ளார்கள். அவர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

இயான் போத்தம்
இவர் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஆவார். 1970 மற்றும் 1980 களில் விளையாடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 27,000 பந்துகளை வீசியிருக்கிறார். ஆனால் இவர் ஒரு நோபால் கூட வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான்கான்
தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இவர். உலக கோப்பை வென்ற பாக்கிஸ்தான் அணியின் தலைவர். இவர் சர்வதேச போட்டிகளில் கிட்டத்தட்ட 25000 பந்துகளை வீசியுள்ளார். ஆனால் இவரும் ஒரு நோபால் கூட வீசியதில்லை. இம்ரான் கான் 362 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

டென்னிஸ் லில்லி
அவுஸ்திரேலியா அணியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். 1980காலகட்டத்தில் விளையாடியவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 21,000 பந்துகளை வீசி 309 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவர் ஒரு நோபால் கூட வீசியதில்லை.

கிரேம் ஸ்வான்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடிய இங்கிலாந்தின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இவராவார். 13 வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 26 ஆயிரம் பந்துகளை வீசியுள்ளார். இருப்பினும் ஒரு நோபால் கூட இவர் வீசியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *