ஒரு வெள்ளைக்காரனை வைத்து சாதனை படைத்த தமிழன் அஷ்வின் !! முழு தமிழனுக்கும் பெருமை

விளையாட்டு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றிருந்தது. இவ்வாறான நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் கிடைக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்று இருக்கிறது.

எதிர்வருகின்ற ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்த அணி தெரிவாக போகிறது என்பதை தீர்மானிக்கின்ற மிக முக்கிய ஒரு தொடராக இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான குறித்த இந்த டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது.

இது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 112 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மீண்டும் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதில் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸை தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பு செய்தார். இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அஸ்வின் இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் இரு துடுப்பாட்ட வீரர்களை 10 தடவைகள் ஆட்டமிழப்பு செய்திருந்தார்.

அது அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வேர்னர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரை பத்து தடவைகள் ஆட்டமிழப்பு செய்திருந்தார். இவ்வாறான நிலையில் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்புச் செய்ததன் மூலம் 11 தடவைகள் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்து இவ்வாறு புதிய சாதனை ஒன்றைப் படைத்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *