2008 தொடக்கம் 2020 வரையில் ஐ.பி.எல் போட்டிகளின் போது அதிக மீட்டர் தூரத்தில் விளா சப்பட்ட சிக்ஸர்கள் !! அடடா இத்தனை மீட்டர் சிக்ஸரா ?

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான டி20 லீக் தொடர்களில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் தொடர் காணப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது இன்று வரையில் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறது. கிரிக்கெட் உலகில் எவ்வளவு தான் லீக் போட்டிகள் நடந்தாலும் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு இருக்கும் பரபரப்பும், விறுவிறுப்பும் வேற லெவல்.

இதுதான் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவின் ஊடாக பார்க்க போகின்ற விடயம் என்னவென்றால் 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரைக்கும் நடைபெற்றுள்ள 13 இந்தியன் பிரீமியர் தொடர்களின் போதும் ஒவ்வொரு தொடர்களிலும் அதிக மீட்டர் தூரம் விளா சப்பட்ட சிக்ஸர்கள் தொடர்பிலான செய்தியாகும்.

அந்தவகையில் 2008ஆம் ஆண்டு முதல் முதலில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது அதிகூடிய தூரத்தில் சிக்ஸர் அ டித்த வீரராக தென்னாபிரிக்க வீரர் அல்பி மோர்கல் காணப்படுகிறார். டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரகையன் ஓஜா வீசிய பந்துவீச்சில் 125 மீட்டர்கள் சிக்சர் விளாசினார். 2008ஆம் ஆண்டு அதிக தூரத்தில் விளாசப்பட்ட சிக்ஸராக அமைந்திருக்கிறது.

2009ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் 119 மீட்டர் சிக்சர் வி ளாசினார். 2010ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரோபின் உத்தப்பா 120 மீட்டரில் சிக்சர் விளா சினார். 2011ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய வீரர் அடம் கில்கிறிஸ்ட் 122 மீட்டர் தூரத்தில் சிக்சர் விளா சினார்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி 112 மீட்டர் தூரத்தில் சிக்சர் விளா சினார். 2013ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 119 மீட்டர் தூரத்தில் சிக்சர் விளாசினார்.

அதே போன்று அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் அதிக தூரம் சிக்ஸர் விளா சிய வீரர்கள் உடைய விபரம் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் வீடியோ உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது.

2014 – Miller vs H Patel (102m), 2015 – Abd vs Malinga (108m) 2016 – Cutting vs Watson (117m) 2017 – T Head vs Umesh (109m) 2018 – Abd vs Tahir (111m) 2019 – Dhoni vs Umesh (111m) 2020 – Pooran vs Samad (106m)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *