பழைய சச்சின் அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு… செம்ம சா த்து சா த்திய நம்ம இளம் வீரர் !! இரட்டை சதம் விளாசி அசத்தல்

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதில் இந்திய அணி மிக முக்கிய அணியாக திகழ்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது இளம் வீரர்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அதிகளவிலான உள்ளூர் தொடர்களை நடத்தி வருகிறது. இதில் ஒரு தொடரான அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட விஜய் ஹசாரே தொடரானது தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கமிருக்கின்ற இந்நிலையில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்த வீரர் தான் பிரித்திவி ஷா.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரித்திவி ஷா தனது முதல் போட்டியிலேயே சதம் அ டித்து தனக்கான இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து உபாதைகள் காரணமாக அணியில் இடம் கிடைக்காத அவருக்கு அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவர் தொடர்ந்தும் சொதப்பியதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரின் இடத்தை தற்போது மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில் நிரப்பியிருக்கும் நிலையில் இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில் அவர் இந்தியாவில் நடைபெற்று வருகின்ற உள்ள10ர் தொடரான விஜய் ஹசாரே தொடரின்போது புதுச்சேரி அணிக்கு எதிரான போட்டியில் 152 பந்துகளை எதிர்கொண்டு 227 ஓட்டங்களை தனி மனிதராக விளாசினார். 31 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டார்.

மும்பை அணியின் தலைவராகவும் கூட பிரித்திவி ஷா செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரித்திவி ஷா இவ்வாறு 227 ஓட்டங்களை பெற்றதன் மூலம் விஜய் ஹசாரே தொடரில் ஒரு துடுப்பாட்ட வீரர் தனிநபராக பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்த அதிரடியின் மூலம் அவர் மீண்டும் இந்திய அணிக்கு தான் யார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். இந்திய – இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பிரித்திவி ஷா இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *