திரும்பி வந்துட்டேன்னு சொல்லு ! லூவிஸ், கெய்ஸ், பூரண் காலி பண்ணி சுழல் நாயகன் அகில – வைரலாகும் ஹெட்ரிக் விக்கெட் வீடியோ

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபது 20 சர்வதேசப் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டியானது நேற்றைய தினம் நிறைவு பெற்றிருந்தது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினுடைய தலைவர் கிரண் பொல்லார்ட்டின் அபாரமான துடுப்பாட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 131 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தங்களது 20 ஓவர்களையும் நிறைவு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 132 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இலகு வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிரண் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி அணியினுடைய வெற்றியை இலகுவாக்கி கொடுக்க இறுதியில் வந்த வீரர்கள் போட்டியை முடித்து வைத்தார்கள்.

இந்த போட்டியின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய ஹெட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியமை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய 14ஆவது வீரராக அகில தனஞ்சய உருவானதுடன் இலங்கையைச் சேர்ந்த மூன்றாவது பந்துவீச்சாளராக அவர் சாதனை படைத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான நிக்கொலஸ் பூரண், கிறிஸ் கெய்ல், எவின் லூவிஸ் ஆகிய மூன்று பேருடைய விக்கெட்களையும் வீழ்த்தி அகில தனஞ்சய இவ்வாறு கிரிக்கெட் சாதனை படைத்தார். அவர் ஹெட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1367278283578961921

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *