இந்த வீரர்கள் பாத்திரங்கள் கழுவுவது, தண்ணீர் பிடித்து வைப்பது, இரவில் சாப்பாடு இல்லாமால் கூட இருந்துள்ளார் ! நாங்கள் சென்று பார்த்த போது தான் இதெல்லதம் தெரியவந்தது – இஷானின் தந்தை ப கீர் தகவல்

விளையாட்டு

இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தற்போது இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் தொடரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவுபெற்று தற்போது 5 போட்டிகள் கொண்ட இருபது-20 சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில் தற்போது அடுத்த தொடரான டி20 சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நான்காவது போட்டி இன்று நடைபெறுகிறது.

அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்காக அறிமுக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இஷான் கிஷான் முக்கிய பங்கு வகித்தார். அவர் அந்தப் போட்டியில் அதிரடியாக அரைசதம் கடந்து போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றது கொடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையை இஷான் கிஷான் இந்த நிலைமைக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார் என்பதையே அவரின் தந்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ‘இஷான் கிஷான் சிறுவயதில் கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவதாகவும், அவருக்கு போதுமான பயிற்சி இருந்தால் அவர் கண்டிப்பாக நல்ல உயர்த்தை அடைவார் என்று கூறினர். இதற்கு முதலில் இஷான் ராஞ்சிக்கு செல்ல வேண்டும் என்றனர். இதனால் நாங்களும் இஷானை 12வயதில் ராஞ்சிக்கு அனுப்பி வைத்தோம்.

ராஞ்சியில் ஒரு அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான்கு சீனியர்களுடன் தங்கியிருந்த இஷான் அவர்களின் பாத்திரங்கள் கழுவுவது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்று மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். ஒருசில நேரங்களில் இஷான் இரவில் சாப்பிடாமலயே உறங்கிவிடுவார். ஆனால் இதெல்லாம் எங்களுக்கு நாங்கள் அங்கு சென்ற போது தான் தெரிய வந்தது’ என்று இஷான் கிஷனின் தந்தை கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *