‘பக்கா பிளான் ஓடதான் சண்டைக்கு இறங்கினோம். எந்த இலக்கையும் சேஸிங் செய்யலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது’ – வெற்றியின் பின்னர் இலங்கை கேப்டன் டாக்

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி ஷார்ஜா மைதானத்தில் சாதனையையும் படைத்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ஓபனர் குர்பஸ் 84 (45), ஒன் டவுன் பேட்ஸ்மேன் இப்ராஹிம் ஜார்டன் 40 (38) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுத்து நஜிபுல்லா 17 (10) ரன்களை எடுத்தார். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 175-6 ரன்களை சேர்த்தது.
ஷார்ஜா மைதானத்தில் இப்படிப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர்களை யாரும் சேஸ் செய்யாததால், இலங்கை அணி நிச்சயம் தோற்றுவிடும் என்றுதான் கருதப்பட்டது. இந்நிலையில் 176 ரன்களை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் முடிவில் 179-6 ரன்களை குவித்து வெற்றியைப் பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் வெற்றியின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.