Cricket

தல டோனிக்கு இப்படி ஒரு ரசிகர் உள்ளாரா ? வசிக்கிற வீட்டுல இருந்து, போடுற ஜட்டி வரைக்கும் டோனி தான் போல

இந்தியாவின் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான ரெங்கசாமி மகன் கோபி கிருஷ்ணன் என்பவர் டோனியின் தீவிர ரசிகராவார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோனி மீது உள்ள தீவிர பற்றால் தனது வீட்டை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சல் கலரில் பெயிண்ட் அடித்து வீட்டில் ஒரு பகுதியில் டோனி படம் வரைந்து அசத்தினார். இதனால் உலக அளவில் உள்ள டோனி ரசிகர்கள் கோபியை சமூக வலைத்தளங்களின் வழியாக பாராட்டினார். டோனியே தனது ட்விட்டர் பக்கத்தில் கோபிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல்லில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது, ஆனாலும் மனம் தளராமல் டோனி மீது கொண்ட நீங்கா பற்றால் டோனியின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு, கோபி தனது வீட்டை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலரில் மாற்றியதோடு மட்டும் அல்லாமல், தனது வீட்டில் ஹேப்பி பர்த்டே டோனி என்ற வாசகம் எழுதி, தனது வீடு முழுவதும் டோனி படத்தை வரைந்து கொண்டு இருக்கின்றார். இவர் தனது இரண்டு சக்கர வாகனம் மஞ்சள் கலரில் வாங்கி, அதற்கு டோனியின் ஜெர்சில் உள்ள 7 என்ற எண்ணை தனது வண்டியின் நம்பர் பிளேட்டில் 777 வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button