இப்போது இந்தியர்களுக்கு இருக்கும் வலியை இலங்கையர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். அன்று பாகிஸ்தானுடன் நடந்த சம்பவம் இதுபோன்ற சம்பவம் இதற்கு உதாரணம்

15ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 14 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. இறுதியில் 19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. மொஹமட் றிஸ்வான் 71 ஓட்டங்களை குவித்து இந்திய அணிக்கு செம்ம சொப்பனமாக விளங்கினார்.
இந்த போட்டியில் இறுதி நேரத்தில் ஆசிப் அலியின் இலகுவான பிடியெடுப்பை அர்ஸ்தீப் சிங் நழுவவிட்டார். இறுதியில் ஆசிப் அலிதான் இரு சிக்ஸர்களை விளாசி வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அன்று சம்பியன்ஸ் டிராபியில் இலங்கை அணி வெற்றிபெறவிருந்த நிலையில் முக்கியமான கேட்ச்சை திஸர பெரேரா நழுவவிட்டார்.