Cricket

இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்த தரமான 7 சம்பவம் இவைதான்

ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பவுலிங் தான் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல ஃபீல்டிங்கின் போது களத்தில் மேற்கொண்ட சில பிழைகளும் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

01
பிஷ்னோய் வீசிய 18-வது ஓவரின் மூன்றாவது பந்தை பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி எதிர்கொண்டார். பந்து டாப் எட்ஜ் ஆகி ஹர்ஷ்தீப் வசம் தஞ்சம் அடைந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார் அவர். இந்திய அணியின் தோல்விக்கு இந்த கேட்ச் டிராப் காரணம் என பலரும் சொல்லி வருகின்றனர். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது.

02
அந்த வாய்ப்புக்கு முன்னதாக அதே ஓவரின் மூன்றாவது பந்து றுனைந ஆக வீசப்பட்டது. அந்த பந்து ஆசிஃப் அலியின் பேட்ஃகிளவுஸில் பட்டது போல இருந்தது. மூன்றாவது அம்பயர் நீண்ட நேரம் ரிவ்யூ செய்த பின்னர் நாட்-அவுட் என அறிவித்திருந்தார்.

03
புவனேஷ்வர் வீசிய 19-வது ஓவரில் மட்டும் இந்தியா 19 ரன்களை லீக் செய்திருந்தது. அந்த ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

04
முக்கியமாக இந்திய அணி பவுலர்களால் முகமது ரிஸ்வான் – முகமது நவாஸ் கூட்டணியை தகர்க்க முடியவில்லை. அவர்களது வலது மற்றும் இடது காம்போ களத்தில் நீண்ட நேரம் தொடர்ந்தது பாகிஸ்தான் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.

05
இந்திய பவுலர்கள் சிக்கனமாக பந்து வீச தவறியது. நான்கு ஓவர்கள் பந்து வீசி புவனேஷ்வர் 40 ரன்கள், ஹர்திக் பாண்டியா 44 ரன்கள், ஷால் 43 ரன்கள் லீக் செய்திருந்தனர்.

06
ஆறாவது பவுலிங் ஆப்ஷனை இந்திய அணி முயற்சி செய்யாததும் ஒரு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

07
அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் சேர்க்காதது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்புவதை கவனிக்க முடிந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button