Cricket

யானைக்கொரு காலம், பூனைக்கொரு காலம்… கடைசியில் இலங்கையிடம் மண்டியிட்டுள்ள இந்தியா… இந்தியாவின் எதிர்காலம் இலங்கையின் கையில் – இந்தியா பைனல் தகுதிபெற வேண்டுமானால் இது நடக்க வேண்டும்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் மோதும். அந்தவகையில், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. லீக் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணியை பழிதீர்த்தது பாகிஸ்தான்.

ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமானால், அடுத்த 2 போட்டிகளில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்த வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button