ஐ.பி.எல்லை மட்டும் நம்பி வீணாக காலத்தை இழந்த ரெய்னா… இப்போ எடுத்திருக்கார் பாருங்க ஒரு முடிவு.. இனி உலகம் முழுவதும் சுற்றும் சின்ன தல

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் 13ஆவது சீசன் அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுரேஷ் ரெய்னா, திடீரென்று அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். அந்த சமயத்தில், இதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. சிஎஸ்கே நிர்வாகத்திற்கும், அவருக்கும் பிரச்சினை இருந்ததாக மட்டும் செய்திகள் வெளியாகி வந்தன, இருப்பினும் அடுத்த சீசனில் ரெய்னா சிஎஸ்கேவுக்காக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக ரெய்னா விளையாடியபோது, அவர் பெரிய ஸ்கோர்களை அடிக்கவில்லை. இதனால், கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அடுத்து மெகா ஏலத்திற்குமுன் ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கவில்லை. மெகா ஏலத்தின்போதும் 2 கோடி மிச்சமாகி கையிருப்பில் இருந்த நிலையில், ரெய்னாவை சிஎஸ்கே வாங்கவே இல்லை.
2020ஆம் ஆண்டில் ரெய்னா போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்பியதை மனதில் வைத்துதான், நிர்வாகம் பதிலடி கொடுக்கும் விதமாக ரெய்னாவை வாங்கவில்லை என தகவல் பரவியது. வேறு எந்த அணியும் ரெய்னாவை வாங்கவில்லை. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றிய ரெய்னா, சமீபத்தில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். பயிற்சியின்போது அவர் சிக்ஸர்களை பறக்கவிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது.
இந்நிலையில், ரெய்னா இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை பெற்றுவிட்டு, வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்றால், இந்தியாவில் ஒரு இடத்தில்கூட கிரிக்கெட் விளையாட முடியாது என்பது பி.சி.சி.ஐ.யின் விதிமுறை.
ரெய்னாவை இனி எந்த ஐபிஎல் அணியும் வாங்க வாய்ப்பில்லை என்பதால்தான், இவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெய்னா இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை பெற்றுவிட்டு தென்னாப்பிரிக்க டி20 லீக், தி கண்ட்ரட், கரீபியன் பிரிமியர் லீக், பிக் பாஷ் லீக் என அனைத்து தொடர்களிலும் பங்கேற்று கோடிகளை குவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெய்னா சிறந்த வீரர் என்பதால், இவரால் இன்னமும் 4 ஆண்டுகள்வரை கிரிக்கெட் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.