Cricket

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… நிதான ஆட்டம் மூலம் மீண்டும் பார்முக்கு வந்து சாதனை படைத்த படைத்த கிங் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 2 அரைசதங்கள் அ டித்துள்ளார். ஹாங்காங்கிற்கு எதிராக 59 ரன்களை குவித்த விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் அ டித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது 32வது அரைசதம் ஆகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி. இந்த பட்டியலில் 31 சதங்களுடன் ரோஹித் சர்மா 2ம் இடம் பிடித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் 4வது அரைசதம் இது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக டி20யில் அதிக அரைசதங்கள் அ டித்த வீரர்கள் பட்டியலில் கெவின் பீட்டர்சன், மார்டின் கப்டில், கேன் வில்லியம்சன், ஆரோன் ஃபின்ச் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் விராட் கோலி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button