‘இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். இலங்கை அணியுடனே தோல்வியடைந்து எலிமினேட் ஆகிடும்’ – பாக். முன்னாள் கேப்டன் இன்சமாம்

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி எலிமினேட் செய்யப்படும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் போட்டி ஆரம்பமாக முன்னர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தனது இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து பலரதும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,
‘நேற்றுதான் எனக்கு முதல் முறையாக தெரியவந்தது. அதிக அளவில் சந்தோசம் இருந்தாலும் நமக்கு இரவில் தூக்கம் வராது என்று. இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். இலங்கை அணியுடன் நடைபெறும் போட்டியின் போது தோல்வியை தழுவி எலிமினேட் செய்யப்படலாம்.’ என்று பேசினார்.