பேட்டை நீட்டி சண்டித்தனம் காட்டிய பாக். வீரர்.. இதெல்லாம் எனக்கிட்ட ஒத்துவராது என மாறி வெழுக்க தயாரான ஆப்கான் வீரர். – நடுவர் தடுக்காவிட்டால் பாக். வீரரின் கதை காலி – வீடியோ உள்ளே

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் பவுலர் பரீட் அஹமட் – பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி ஆகியோருக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் த்ரில் வெற்றிபெற இறுதிப்போட்டிக்கு தெரிவானது. குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஓமர்சாய் 10 ரன்னும், இறுதி ஓவரில் அதிரடி காட்டிய ரஷித் கான் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். அடுத்துவந்த பகர் சமான் 5 ரன்களுடன் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 20 ரன்னில் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய இப்தார் அகமது, ஷதாப் கான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்தார் கான் 30 ரன்னிலும், ஷதாப் கான் 36 ரன்னிலும் வெளியேறினர்.
பின்னர் வந்த பாகிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பரூக்கி கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் 19.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 131 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.
https://youtu.be/JwzVsOZXXY0