ஆப்கானிஸ்தானை வெறித்தனமாக வேட்டையாடி ஆசியக்கிண்ணத்தை கனவில் கைப்பற்றிக்கொண்ட டீம் இந்தியா ! ஒரு வெற்றியாவது பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
முன்னதாகவே பைனலுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் அபார வெற்றிபெற்று இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கோலி – ராகுல் ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் வந்த வேகத்தில் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த ரிஷப் பண்ட் களமிறங்கினார்.
மறுபுறம் விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.