ஆல் ஏசியாவும் எங்க கண்ரோல்… இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வாயால் வடை சுடவே மட்டும் தெரியும். சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த இலங்கை அணி ! இலங்கையின் கம்பேக் பத்தி நீங்க என்ன நெனக்குறீங்க ?

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி இலங்கை அணி ஆறாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் பனுகா ராஜபக்சா, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.