‘இலங்கை சம்பியனாக நான் தான் காரணம். கோப்பையை கைப்பற்றிய இலங்கைக்கு எனது வாழ்த்துகள்’ – பரபரப்பை ஏற்படுத்திய பாகிஸ்தான் வீரரின் ட்வீட்

15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி இலங்கை அணி ஆறாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தற்போது ட்வீட் வெளியிட்டுள்ள சதாப் கான், தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.
”கேட்ச்தான் மேட்சில் வெற்றியைப் பெற்றுத்தரும். என்னை மன்னித்துவிடுங்கள். இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். நஷிம் ஷா, ஹரிஷ் ரௌஃப், நவாஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். ரிஸ்வான் இறுதிவரை போட்டிங்கில் போராடினார். ஒட்டுமொத்த அணியும் வெற்றிக்காக போராடியது. நான் செய்த தவறுகள்தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம். கோப்பையை கைப்பற்றிய இலங்கைக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறினார்.