வீடியோ – ‘இவர்களை வீழ்த்திவிட்டீர்கள். எங்களை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கு இலங்கைக்கு நன்றி..’ – இலங்கையின் வெற்றியை வீதிகளில் கொண்டாடிய ஆப்கான் ரசிகர்கள்

ஆசியக் கோப்பை தொடரை வென்ற இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடியுள்ளனர். ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர் அப்துல்ஹக் ஒமேரி பகிர்ந்த வீடியோவில், இலங்கையின் வெற்றிக்குப் பின்னர் சில ரசிகர்கள் ஆரவாரத்துடனுடன், சிலர் மகிழ்ச்சியுடனும், நடனமாடியபடி, வீதியில் இறங்கி இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடி தீர்த்தனர். மேலும், சமூக வலைதள பக்கங்களிலும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

குறிப்பாக, பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் பீல்டிங் செய்யும் போது, அந்நாட்டு வீரர்களின் செயல்திறனைப் பார்த்து கேலி செய்யவும் வீடியோவையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எங்களை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கு வாழ்த்துகள் இலங்கைக்கு நன்றி.. இலங்கை வெற்றியை ஆப்கானிஸ்தான் உற்சாகப்படுத்துகிறது மற்றும் கொண்டாடுகிறது,’ என்று ஒரு ஆப்கான் ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.
ஐ.சி.சி. தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மற்றோரு ரசிகர், நடப்பு ஆசிய தொடரில் நடந்த 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் மண்ணைக் கவ்வியது. அதேவேளையில், ஆப்கான் அணி ஒருமுறை இலங்கை அணியை வீழ்த்தியது என்று கேலி செய்து பதிவிட்டுள்ளார். ‘நாங்கள் ஆசிய கோப்பை சாம்பியன்களை வென்றோம். ஆனால் நீங்கள் 2 முறை தோற்றீர்கள்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
அதே பதிவின் கீழ் கமெண்ட் செய்துள்ள ஒரு ரசிகர், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தெருக்களில் நடனமாடி இலங்கையின் வெற்றியைக் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ‘இலங்கையின் வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்கள் இப்படித்தான் கொண்டாடுகிறார்கள். #Asiacup2022’ என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். மற்றோரு ஆப்கான் ரசிகர், பாகிஸ்தானின் பீல்டிங்கை கேலி செய்த ஒரு புகைப்படத்தை, பாகிஸ்தான் ஜாம்பாவான் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்ட வீடியோவிற்கு கீழ் பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு ரசிகர், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ‘பாகிஸ்தான் வீழ்ச்சி என் மகிழ்ச்சி’ என்று ட்வீட் செய்துள்ளார்.