அந்த மனசு தான் சார் கடவுள்.. ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தேசியக் கொடியை கையில் பிடித்துக் கொண்டிருந்த பாக். வீரர் அப்ரிடியின் மகள் ! – அப்ரிடியின் விளக்கம் உள்ளே

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி ஆறாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்றது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை சூப்பர்-4 போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடியின் மகள் இந்தியக் கொடியைப் பிடித்துக் கொண்டிருந்த விஷயம் வைரலாகி வருகிறது.

இதனை தன் மனைவி தன்னிடம் உறுதி செய்ததாக லைவ் ஷோ ஒன்றில் ஷாகித் அஃப்ரீடியே கூறினார். இதுதொடர்பாக ஷாகித் அஃப்ரீடி கூறும்போது, ‘அன்றைய தினம் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் 10 சதவீதம் மட்டுமே பாகிஸ்தான் ரசிகர்கள் இருந்ததாகவும் இதனால் பாகிஸ்தான் தேசியக் கொடி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்,
மற்ற எல்லோரும் இந்திய ரசிகர்கள்தான், எனவே என் மகள் இந்தியக் கொடியை பிடித்துக் கொண்டு அதை ஆட்டினாள், எனக்கு இதன் வீடியோ வந்தது, ஆனால் இதை வெளியிடுவதா வேண்டாமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை’ என்றார்.