Cricket

வாழ்நாள் தடையை தகர்த்தெறிந்து ஆஸி. கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாகவுள்ள பிரபல வீரர் !

ஆஸி. அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்துவந்த நிலையில், 2018 தென்னாப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய மூவரும் தடைபெற்றனர். வார்னர், ஸ்மித் ஆகிய இருவரும் மிகச்சிறந்த வீரர்கள் என்பதால் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் கம்பேக் கொடுத்துவிட்டனர். பான்கிராஃப்ட்டின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் அத்துடன் முடிந்துவிட்டது.

அந்த சம்பவத்தின் போது, ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் கிரிக்கெட் ஆட ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், கேப்டன்சி செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதனால் அப்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் நியமிக்கப்படனர்.

டிம் பெய்னுக்கு பிறகு டெஸ்ட் அணியின் கேப்டன்சியை பாட் கம்மின்ஸ் ஏற்றார். இந்நிலையில், இப்போது ஆரோன் ஃபின்ச் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாட் கம்மின்ஸே ஒருநாள் அணியின் கேப்டன்சியையும் ஏற்கலாம் என்றால் அதை கம்மின்ஸ் விரும்பவில்லை.

ஆஸ்திரேலிய அணியை 55 சர்வதேச ஒருநாள் போட்டிகளீல் கேப்டனாக இருந்து வழிநடத்திய ஆரோன் ஃபின்ச் அடுத்த கேப்டன் குறித்து பேசும்போது, நான் வார்னர் கேப்டன்சியில் நிறைய ஆடியிருக்கிறேன். வியூகங்கள் வகுப்பதில் வல்லவர் வார்னர். வார்னரே அடுத்த கேப்டனாகலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் வார்னர் கேப்டனாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விவாதித்து அந்த தடையை நீக்கி ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் வார்னர். இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவே அடுத்த கேப்டனாக வார்னர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button