ரோஹிட் – டிராவிட் கூட்டணி வந்த பின்னர், ஐ.பி.எல்லில் சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இளம் வீரர்.. வேதனையில் அழுகிறார்
ரோகித் சர்மா மற்றும் டிராவிட் கூட்டணி வந்தபிறகு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரருக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீப காலமாக, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜோடி பல இளம் வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. ஆனால், அதிரடி பேட்ஸ்மேன் சுப்மன் கில், இவர்களின் கூட்டணிக்குப் பிறகு இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட இடம் பெறவில்லை. ஐபிஎல் 2022-ல் சுப்மான் கில்லின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. தனது சிறப்பான பேட்டிங் மூலம் அணியையும் இறுதிப் போட்டியில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரால் இந்திய டி20 அணியில் இன்னும் இடம் பெற முடியவில்லை.
2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் ஒருநாள் போட்டியை சுப்மன் கில் விளையாடினார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்தப் போட்டிகளில் அவர் 71.29 சராசரியில் 499 ரன்கள் எடுத்துள்ளார். 9 இன்னிங்ஸில் 1 சதத்தையும், 3 இன்னிங்ஸில் 50 ரன்களையும் கடந்துள்ளார் சுப்மான் கில். இது தவிர, அவர் இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதில் அவர் 30.47 சராசரியில் 579 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகும் அவரால் டி20 அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.
2022 ஆசிய கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் சுப்மான் கில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் {ப்மான் கில் 130 ரன்களை விளாசினார். அதே நேரத்தில், முதல் ஒருநாள் போட்டியில், அவர் 82 ரன்கள் எடுத்தார். இதனால், தொடர் நாயகன் விருது கிடைத்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், அவர் ஆட்டமிழக்காமல் 64, 43 மற்றும் 98 என்ற மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடினார். இந்த சுற்றுப்பயணத்திலும் {ப்மான் கில் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.