Cricket
‘டி20 உலகக்கோப்பையில் பும்ரா, ஸ்டார்க் இன்னும் சிலரின் டெத் ஓவர்களில் குறைந்தது 4 சிக்ஸர்களாவது விளாசுவேன்’ – நாளொன்றுக்கு 150 சிக்ஸர்களை அடித்து பயிற்சிபெறும் ஆசிப் அலி ஓபன் டாக்
2022ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெடட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஆசிப் அலி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
‘வரும் டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரிட் பும்ரா, மிட்செல் ஸ்டார்க், ககிஸோ ரபாடா, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரின் பந்துவீச்சில் டெத் ஓவர்களில் குறைந்தது 4 சிக்ஸர்களாவது விளாசுவேன்’ என தெரிவித்துள்ளார்.