Cricket

ஆசியக்கோப்பையில் கோலி ஓப்பனிங்கில் சதம் அடித்தார் என்பதற்காக டி20 உலகக்கோப்பையில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிடையாது. அவரை விட இவர் சிறப்பாக ஓப்பனிங் ஆடுவார்.. – கம்பீர் வெளிப்படை

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி20 உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்தவகையில் ஆசிய கோப்பை போட்டியில் ஓபனிங்கில் இறங்கி விராட் கோலி சதமடித்தது, அவரையே ரோஹித்துடன் ஓபனிங்கில் இறக்கலாம் என்ற கருத்து வலுத்துவருகிறது.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விராட் கோலி ஓபனிங்கில் அபாரமாக விளையாடியிருப்பதால் தான் இந்த வலியுறுத்தல் வலுக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் கோலியை ஓபனிங்கில் இறக்கலாம் என்று கருத்து கூறியிருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், விராட் கோலி ஓபனிங்கில் இறங்கி சதமடித்ததும் ரோஹித் – ராகுல் இணைந்து ஓபனிங்கில் எவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கின்றனர் என்பதை மறந்துவிட்டோம்.

ரோஹித்துடன் கோலியை ஓபனிங்கில் இறக்கவேண்டும் என்று பேசுகிறோம். ராகுலை பற்றி யோசித்து பாருங்கள். தனது இடத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அவர் பயப்படமாட்டாரா..? அவர் ஒரு போட்டியில் சரியாக ஆடாவிட்டால் கோலியை ஓபனிங்கில் இறக்கிவிடுவார்களோ என்ற பயம் ராகுலுக்கு வந்துவிடும். அது அணிக்கு நல்லதல்ல. ராகுல் மாதிரியான டாப் கிளாஸ் வீரரை அந்த மாதிரியான நிலைக்கு தள்ளக்கூடாது.

ரோஹித் மற்றும் கோலியை விட சிறந்த வீரர் கேஎல் ராகுல். அவரை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளக்கூடாது என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button