ஓ.. இதான் விஷசமா ? 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பையில் நம்பர் 1 அணி இலங்கையிடம் அசிங்கப்பட்டு முதல் சுற்றுடன் வெளியேற இதுதான் காரணம்.. 66 சதவீதம் உறுதி

அண்மையில் நடந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. நம்பர் 1 அணியாக உள்ள இந்தியா தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் மலையாள பிரபல நாளிதழ் ஒன்று இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில், மோசமான அணித் தேர்வே முக்கியக் காரணம் என்று 66 சதவீத ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

26.37 சதவீதம் பேர் அதீத நம்பிக்கை தான் தோல்விஅடைய காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். 3.79 சதவீதம் பேர் அதிக அளவில் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்பதையும், 2.93 சதவீதம் பேர் வயதான வீரர்கள் இருப்பதாகவும் தோல்விக்கு காரணமாக கூறி உள்ளனர். பந்துவீச்சு குறித்த கேள்விக்கு 34.68 சதவீதம் பேர் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
45.30 சதவீதம் பேர் தினேஷ் கார்த்திக்கை சரியாக பயன்படுத்தவில்லை என்றும், 19 சதவீதம் பேர் ரவிச்சந்திரன் அஷ்வினின் சேவைகளை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர். மிகவும் தவறவிட்ட வீரர் யார் என்ற கேள்விக்கு 43.59 பேர் பும்ராவையும், 42.49 சதவீதம் பேர் சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ளனர். பும்ரா மற்றும் சஞ்சு அணியில் இடம் பெற்றிருந்தால், ஆசிய கோப்பையில் இந்தியாவின் அதிர்ஷ்டம் மாறியிருக்கும் என்று பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் கருதினர்.