ஆசியக்கோப்பை பைனல் விளையாடிய டீம் என்ற பரிதாபம் இல்லாமல் பாகிஸ்தானை கராச்சியில் பின்னி பெடலெடுத்த இங்கிலாந்து.. கதறும் பாக். ரசிகர்கள்

17 ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. 7 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.