ஐ.பி.எல்ல வேணா அம்பாணிக்கு 5 கப் ஜெயிச்சிருக்கலாம்.. ஆனா இந்தியாவுக்கு சுத்த வேஸ்ட்.. இவரையே கேப்டனா கொண்டுவாங்க – ஒன்றுசேர்ந்த இந்திய ரசிகர்கள்

அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் 208 ரன்கள் என்ற மெகா டார்கெட் நிர்ணயித்தபோதும், வெற்றி பெற முடியவில்லை. பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணி, ஆசியக்கோப்பையிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நல்ல ஸ்கோரை எடுத்து அதனை பந்துவீச்சில் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரிய ஸ்கோரை டார்கெட்டாக நிர்ணயித்து, பந்துவீச்சில் இந்திய அணி சோடைபோயிருக்கிறது.

இது ரோகித் சர்மாவின் கேப்டன்சி தவறால் கிடைத்த முடிவுகள் என ரசிகர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றும் விளையாடும் அணிகளுக்கு காட்டும் அர்பணிப்பு, இந்திய அணிக்காக விளையாடும்போது இருப்பதில்லை எனத் தெரிவித்துள்ள ரசிகர்கள், ரோகித் சர்மாவின் பிளேயிங் லெவனையும் சாடியுள்ளனர். தவறான பிளயேர்களை அணிக்குள் கொண்டு வரும் தவறை ரோகித் தொடர்ச்சியாக செய்கிறார். அதேபோல், சரியான நேரத்தில் சரியான நபர்களுக்கு பந்துவீச்சை கொடுப்பதிலும் தவறு செய்கிறார்.
புவனேஷ்வர் குமாரால் டெத் ஓவர்கள் வீச முடியவில்லை என்பதை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியிலேயே கண்கூடாக தெரிந்துவிட்டது. அப்படி இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு ஏன் டெத் ஓவரில் அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்து 20 ஓவர் உலகக்கோப்பை வர இருக்கும் நிலையில், இதே தவறுகளை மீண்டும் செய்தால் அந்த கனவை கலைத்துவிட வேண்டியது தான் எனவும் கூறியிருக்கும் ரசிகர்கள், இந்திய அணிக்கு ரோகித்துக்கு பதிலாக விராட் கோலியையே மீண்டும் கேப்டனாக நியமிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.