எவன்டா சொன்னது எனக்கு பேட்டிங் ஆட தெரியான்னு… தல டோனிக்கு அப்புறம் நான் தான் பினிஷர் என்பதை நிரூபித்த தமிழக வீரர் கார்த்திக் – விமர்சித்தவர்கள் எங்கே ?

சுற்றுலா ஆஸி. – இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் அடித்தது. கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன் அடித்தார். அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 ரன் குவித்து களத்தில் இருந்தார். பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
விராத் கோலி 11 ரன்னும், பாண்ட்யா 9 ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் வெறும் 2 பந்துகளில் 10 ரன் அடித்து தான் ஒரு பினிஷர் என்பதை நிரூபித்தார். 7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது.