சி.எஸ்.கேவின் ஆட மனசை இழந்த ஜடேஜா, ஆனா செய்த ஒப்பந்தத்தால விலக முடியாத நிலையில் சிக்கித்தவிக்கும் ஜடேஜா. அவரை இரு அணிகள் வலைவீசியும் விட்டுக்கொடுக்காத சி.எஸ்.கே
2022 ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளின் விளைவாக சீசனின் இடையே தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ஜடேஜாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அந்த சீசனில் அதன்பின்னர் அவர் ஆடவில்லை. கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் சீசனின் இடையே மாற்றப்பட்டதை பெரும் அவமானமாகவும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருதிய ஜடேஜா, சிஎஸ்கே அணி மீது கடும் அதிருப்தியடைந்தார்.
இதையடுத்து சமீபத்தில் சிஎஸ்கே அணியை சமூக வலைதளத்தில் அன்ஃபோலா செய்தார். அதனால் அடுத்த சீசனில் ஜடேஜா வேறு அணிக்கு ஆடலாம் என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த சீசனுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் ஜடேஜாவை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ததால், ஜடேஜா இன்னும் 2 சீசன்களுக்கு சிஎஸ்கே அணியின் ஒப்புதல் இல்லாமல் அந்த அணியிலிருந்து விலகமுடியாது.
சி.எஸ்.கே – ஜடேஜா இடையே ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அவரை தட்டித்தூக்க டெல்லி கேபிடள்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முயற்சி செய்தன. ஜடேஜாவை டிரேட் செய்யும்படி அந்த அணிகள் சிஎஸ்கேவை அணுகின. சிஎஸ்கேவும் ஜடேஜாவை டிரேட் செய்துவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கேவோ ஜடேஜாவை அவ்வளவு எளிதில் விட விரும்பவில்லை.
ஜடேஜாவை விட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஜடேஜா அதையும் மீறி வேறு அணிக்கு செல்ல முயல்வது ஐபிஎல்லில் அவருக்கு தடை விதிக்க வழிவகுக்கும். அதையும் மீறி அவர் சிஎஸ்கேவிற்கு ஆட விரும்பவில்லை என்றால், ஏதாவது காரணம் கூறி ஆடாமல் இருக்கலாம். அப்படி ஆடவில்லை என்றால், அவருக்கு ஊதியம் கிடைக்காது. எனவே ஜடேஜா இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஆடினால் சிஎஸ்கேவிற்காக ஆடவேண்டும். வேறு அணிக்காக ஆடமுடியாது.