பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜேர்சி நம்பருக்கு பின்னால் ஒழிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அவர்களின் பெயரை விட அவர்களின் எண்களை சொன்னாலே நமக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு 7 என சொன்னால் தோனி என அனைவருக்கும் தெரியும். இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக்கான எங்களை தேர்வு செய்து அதனை தங்களது ஆடையில் அச்சிட்டுள்ளனர். இந்த எங்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா. அதனை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

மகேந்திர சிங் தோனி 7
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் எண் 7 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணை அவர் எதற்க்காக தேர்வு செய்தார் என்பதற்கான காரணம் தெரியுமா? தோனியின் பிறந்த நாள் 7 – 7 – 1981. இதில் பிறந்த நாள் மற்றும் மாதம் இரண்டும் ஏழாம் எண்ணாகவே இருப்பதால் அதனை தன் ஜெர்சி எண்ணாக இணைத்துக் கொண்டார்.
விராட் கோலி 18
இந்திய அணியின் தற்போதைய அணித்தலைவர் செயல்பட்டு வருபவர் விராட் கோலி. இவர் தனக்கான எண்ணாக தேர்வு செய்திருப்பது 18. இது இவருக்கு மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதற்கான காரணத்தை விராட் கோலி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதில், நான் இந்த எண்னை தேர்வு செய்ய காரணம் என் அப்பா தான். அவர் இறந்த தேதி 18 டிசம்பர் 2006 அந்த நாளை அவரின் நினைவாக எனது ஜெர்சி எண்ணாக சேர்த்துக்கொண்டேன். இந்த எண் என்னுடன் இருக்கும் போது என் அப்பவே என்னுடன் இருப்பதாக தோன்றும் எனவும் கூறியிருந்தார்.
ரோஹித் சர்மா 45
ரோஹித் சர்மா தற்போதைய கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்த வீரர், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்த வீரர்என பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். இவரது ஜெர்சி எண் 45 இது இவரின் தாயாரால் தேர்வு செய்யப்பட்டது. அதாவது ரோஹித் சர்மா-வின் அதிஷ்ட எண் 9. ஆனால் அது இவருக்கு முன்னரே பார்த்தீவ் படேலுக்கு சொந்தமானது. அதனால் 4+5 = 9 வருவதால் 45-ஐ தனது எண்ணாக தேர்வு செய்துள்ளார்.
ராகுல் டிராவிட் 5,19
இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்படும் டிராவிட் ஆரம்ப காலங்களில் 5 என்ற எண்ணையே தனது ஜெர்சி எண்ணாக கொண்டிருந்தார். ஆனால் அது இவருக்கு சிறப்பானது அமையவில்லை. எனவே தனது திருமணத்திற்கு பின் தனது மனைவியின் பிறந்தநாளான 19 என்ற எண்ணை தனது எண்ணாக நிர்ணயித்து கொண்டார். இது இவருக்கு அதிஷ்ட எண்ணாகவும் அமைந்தது.